உகண்டாவிலிருந்து கட்டார் வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 51 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று(15) மாலை நடந்துள்ளது.
விமான நிலைய பரிசோதகர்கள் சந்தேகத்திற்கு இடமான குறித்த பெண்ணை சோதனையி்டடுள்ளனர்.
வயிற்றுப் பகுதியை ஸ்கேனர் ஊடாகபரிசோதனை செய்ததில் வில்லைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து வயிற்றுப் பகுதியிலிருந்து சுமார் 51 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் கொக்கெயின் போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

