இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்த 13ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள், 7,096 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று, சுற்றுலா அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, கஸ்கஸ்தான், ஜேர்மனி, உக்ரேன், சீனா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளிலிருந்தே சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு தேவையான விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் சுற்றுலா அபிவிருத்தி சபையில் இதுவரை பதிவுசெய்யாத ஹோட்டல், சுற்றுலா விடுதிகளை பதிவு செய்வதில், சுற்றுலா சேவை வழங்குநர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சின் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
