75 வயதான பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண்குழந்தை

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 70 வயது பெண்மணிக்கு விட்ரோ கருத்தரித்தல் (IVF) உதவியுடன் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இது அவரது முதல் குழந்தை என்று தெரவிக்கப்பட்டுள்ளது. அப் பெண்ணின் கணவரான மால்தாரிக்கு 75 வயது.
இவர்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 அந்த பெண்ணுக்கு வயதை நிரூபிக்க அடையாள அட்டை இல்லை, எனினும், அவர் 70 வயது என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவருக்கு 70 வயது என்று உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
ரபரியும் அவரது கணவர் மால்தாரியும் குஜராத்தில் உள்ள மோரா கிராமத்தில் வசிக்கின்றனர்.

இந்த ஜோடியின் மருத்துவர் துரேஷ் பானுஷால் (Dr. Naresh Bhanushali ) இது மிகவும் அரிதான பிறப்பு என்று கூறுகிறார்.
புதியது பழையவை