ஏ 9 வீதியின் பளை காவல் நிலைய பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று(10) கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக வீதியின் குறுக்கே நிறுத்தப்பட்டதால், சாரதி வாகனத்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த நீர்பம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கப் ரக வாகனத்தில் பயணித்த மூவர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.
மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
