மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று(05) இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொமும்பில் இருந்த வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச சபைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் நபரொருபரிடம் குறித்த உத்தியோகத்தர் இலஞ்சத்தினை பெற்றபோது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதி மன்ற நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு கொண்டு சென்று முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 18.10.2021 ஆந் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவின்வேண்டுகோளுக்கு அமைவாக 18 ஆந் திகதி மேலதிக விசாரனைகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அனுமதியளித்தார்.
