போதைப்பொருளுடன் சீருடையில் இருந்த வெலிக்கடை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை வெலிக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரது சீருடைப் பையில் போதைப்பொருள் இருந்ததாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
வெலிக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் 10 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 10 கிராம் ஐஸ் இருந்ததாகவும், ஒரு கிராம் 12,000 ரூபாய்க்கு தரலாம் என்றும் கான்ஸ்டபிள் தெரிவித்ததாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் போதைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கான்ஸ்டபிள் பணித்துப்பாக்கியுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
