சிறைச்சாலையில் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

#கைதிகளுக்கு கை சுத்திகரிப்பான்களை(சானிடைசர்) பயன்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தடை விதித்துள்ளது.

அதன்படி, கை கழுவுவதற்கு சோப்மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கைதி அவசர காரணத்திற்காக மட்டுமே அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரானிய சந்தேக நபர்கள் கடந்த வியாழக்கிழமை கை கழுவும் திரவத்தை உட்கொண்டதால் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்திற்கு பின்னர் கைதிகளுக்கு கை சுத்திகரிப்பானைபயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறந்த இரண்டு ஈரானிய கைதிகளின் பிரேத பரிசோதனை அடுத்த சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
உறவினர்கள் வரும்வரை உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று ஈரான் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புதியது பழையவை