மின்னல் தாக்கி சிறுமி பலி

மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வந்த நிலையில், சிறுமி தனது வீட்டு வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.

எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது சிறுமி உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை