மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் இன்று (24)காலை இலங்கை போக்குவரத்துசபை பஸ் மோதியதன் காரணமாக இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த பஸ் நாவற்குடாவில் பிரதான வீதியில் உள்ள (யு) வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முனைந்தவர் மீது மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதிய பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது நொச்சிமுனையை சேர்ந்த சிவசம்பு சிவநேசதுரை என்னும் 70 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




