இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 428 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,844 ஆக அதிகரித்துள்ளது.
