ரஷ்யா புறப்பட்டுச் சென்றார் இலங்கை இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எட்டு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார்.

ரஸ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுவோவ் இன் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஜெனரல் சாவந்திர சில்வாவை வரவேற்றுள்ளனர்.

ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜெனரல் சவேந்திர சில்வா பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

ரஷ்ய இராணுவ அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதியது பழையவை