புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி நவன்டாண்குளம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக முந்தல் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்றும், புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தின் போது இரண்டு லொறிகளிலும் பயணித்த ஐவர் படுகாயமடைந்ததுடன், அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தினை அடுத்து, புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் நவன்டாண்குளம் பகுயில் சில மணி நேரம் போக்குவரத்துக்கள் தடைப்பட்டதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

முந்தல் காவல் நிலையப் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்ததுடன் , மேலதிக விசாரனைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை