பாகிஸ்தானில் பாரிய நிலஅதிர்வு


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் இன்று (07)அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த நில அதிர்வு 5 தசம் 7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நில அதிர்வு காரணமாக குறித்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை