யாழ் மாநகர சபை உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாநகரசபை கண்காணிப்பாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பாக கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனை விசாரணைக்காக இன்று (28) காலை பத்து முப்பது மணிக்கு யாழ்ப்பாணம் பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
புதியது பழையவை