மட்டக்களப்பில் -கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி பணிநீக்கம்

மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியின் செயற்பாட்டை தாம் கண்டிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தச் சம்பவத்திற்கு இனவாத விம்பத்தை ஏற்படுத்துவது தவறானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் ஏறாவூர் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவரினால், இரண்டு இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை பணி இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை