சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி மட்டக்களப்பில் இடம்பெற்ற விமான சுற்றுலா சவாரி

சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு விமான நிலையத்தில் இன்று (04) விமான சுற்றுலா சவாரியொன்று இடம் பெற்றது.

சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மட்டக்களப்பு கல்லடி 231 படைப்பிரிவின் பிரிகேடியர் திலூப் பண்டார, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நிரோசன்,
சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைவர் ஹரீப் பிரதாப் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் செல்வராசா மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்திக பொன்சேகா உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது சுற்றுலா சவாரிக்காக முன் கூட்டி பதிவு செய்து கொண்டவர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டு பாசிக்குடா ஏறாவூர் காத்தான்குடி கல்லடி போன்ற பிரதேசங்களை விமான சவாரி மூலம் காட்டப்பட்டது.


புதியது பழையவை