இந்திய - சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும் ‘மித்ரா சக்தி’போர்ப்பயிற்சியின்போது கைக்குண்டு வெடித்ததில் சிறிலங்கா 6 வது பொறியியல் படைப்பிரிவின் மேஜர் தர அதிகாரி காயமடைந்துள்ள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு காயமடைந்த அவர் பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாதுருஓயாவில் நடைபெற்ற பயிற்சியின் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானா இந்த பயிற்சி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் உடனிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனினும் மேஜரின் விரல்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
