சற்றுமுன்னர் வெளியானது பால்மாவின் புதிய விலை

நாட்டில் ஒரு கிலோகிராம் பால் மா 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா 100 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில் பால் மாவிற்கான புதிய விலையினை நிர்ணயித்துள்ளது.

இதேவேளை நிதி அமைச்சினால் வரி அறிவிக்கப்படுமாக இருந்தால் பால் மாவிற்கான விலை மேலும் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய (Lakshman Weerasuriya) தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
புதியது பழையவை