சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்ததையடுத்து - நாட்டில் மண்ணெண்ணெய் அடுப்புக்கு தட்டுப்பாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை உள்ளிட்ட பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னதாக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்ததையடுத்து அதிகளவிலான மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பை நோக்கி செல்ல தொடங்கினர்.

இதன் காரணமாக தற்போது அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடால் மண்ணெண்ணெய் அடுப்பின் விலை ரூபா 1500 முதல் 3000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை