இனமானத் தமிழர்கள் மத்தியில் இன ஈனத் தமிழர்களும் பேரினவாதிகளின் ஒட்டுண்ணிகளாய் வாழுகின்ற அதேவேளை,இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆரம்ப அரசியலுக்காக தமிழ்தேசியக் கட்சியென்னும் விருட்சத்தில் குருவிச்சசைகளாக முளைக்கின்றன.
இந்தக் குருவிச்சை அரசியல்வாதிகள் வளர்ந்த பின்னர் பதவி பணம் என்னும் சுருட்டல் தேவைகளான சுயநலத்தேவைகளுக்காக பேரினவாதிகளின் அரசியலோடு ஒட்டிக்கொண்டு தமிழ்மானர்களை வசைபாடியும்,காட்டிக்கொடுத்தும் பேரினவாதிகளிடம் கைக்கூலிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவர்களும் காக்கை வன்னியனின் மரபணுச் சந்ததிகளேயாவர்.நல்லமரங்கள் பலவற்றின் மத்தியில் நஞ்சு மரங்களும் முளைக்கவே செய்கின்றன.இப்படியான நஞ்சரசியல்வாதிகள் தமழ்மக்களுக்கு பொய்கள் போதைகள் கையூட்டுகள் மோசடிகள் மூலமாகத் தப்பிப்பிழைத்து அரசியல் பிழைப்புச் செய்ககிறார்கள்.
பேரினவாதிகளின் சப்பாத்துகள் செருப்புகளின் கீழ் தமிழர்களை மண்டியிடச் செய்தாவது பிழைத்து வாழவே இந்த தமிழொட்டுண்ணி அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.இவர்களுக்குத் தமிழர்களின் காணிகள் பண்பாடுகள் வரலாறுகள் அபகரிக்கப்பட்டாலோ அழிந்தாலோ பிரச்சினை இல்லை.
ஒட்டுண்ணிகளுக்கு எந்த வழியிலோ பணம் பதவி கிடைத்தால் போதும்.ஏமாற மக்கள் இருந்தால் ஏமாற்ற அடிப்படைவாத ஆண்டான்களும் அடிவருடும் சில ஒட்டுணித்தமிழர்களும் இருக்கவே செய்வார்கள்.திருத்துங்கள்,திருந்துங்கள்.
