இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் என யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளா முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின் ஊடக்ங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் பறிகொடுத்த எமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியே போராட்டங்களை மேற்கொள்கின்றோம் ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்
அவ்வாறு போராட்டத்தினை மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுகின்றனர் அவர்கள் எம்மை படமெடுக்கிறார்கள் வீடியோ எடுக்கிறார்கள் அச்சுறுத்தும் பாணியில் செயற்படுகிறார்கள் ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என நாம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
நாம் கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள் என கோரியே போராட்டங்களை மேற்கொள்கிறோம் போராட்டங்கள் நடாத்தப்படும் போது புலனாய்வாளர்கள் ஏன் எம்மை அச்சுறுத்தும் முகமாக செயற்படுகின்றார்கள் என கேள்வி எழுப்பினார்.
