BBC தமிழ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான U.L.மப்றுக், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 8ம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வருகைத் தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு கடிதம் அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தினால், ஊடகவியலாளர் U.L.மப்றுக்கிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

