இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி கோவிட் தொற்றின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவா்கள் 14 நாட்களுக்கு பின்னா் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்துக்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் சம்பத் அமரதுங்க தொிவித்துள்ளாா்.

இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை முதல் கட்டமாக பல்கலைக்கழகங்களுக்கு 25 வீத மாணவா்களை அனுமதிப்பது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளாா்.
புதியது பழையவை