மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று(13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 44வது அமர்வு
சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையில் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், பிரதேச சபையினால் கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி தின்மக்கழிவுகள் எடுத்தல் மரணம் ஏற்பட்டால் இலவச அமரர் ஊர்தி சேவை தெரு விளக்கு போடுதல் போன்ற பணிகளை செய்கின்றனர்.போரதீவுப்பற்று பிரதேசசபையானது வருமானம் வருவது குறைவாக இருந்தாலும் மக்களுக்கு சேவையினை ஒழுங்கான முறையில் செய்து வருகின்றது அந்த வகையில் குடிநீர் வினியோகம் திறம்பட வரட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
இதன்போது சபையின் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அது தொடர்பான விவாதங்களும் நடைபெற்றன.அதனை தொடர்ந்து சபை 15நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டனர்.
மீண்டும் சபை கூடியபோது 2022ஆம் ஆண்டுக்கான. வரவுசெலவுத்திட்டம் முன் வைக்கப்பட்டது. வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது உப தவிசாளர் நா.தருமலிங்கம் முன்மொழிய உறுப்பினர் ஜெயரட்னம் வழிமொழிந்தார் அதனை சபை உறுப்பினர்களின் அனைவரும் ஏகமனதாக. ஏற்றுக்கொன்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
நேற்றைய சபை அமர்வின்போது அமர்வில் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரனால் 2 பிரேரனைகள் முன் வைக்கப்பட்டன.
பழுகாமத்தில் பிரதேசசபை அலுவலகம் ஊடாக கடந்த காலகட்டத்தில் பழுகாமத்தில் தனியாருக்கு சொந்தமான காணியில் பிரதேசசபை திண்மக்கழிவுகளை நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு வந்தன.
தற்போது கானி உருமையாளர் தகுந்த ஆதாரங்களை காட்டியதன் அடிப்படையில் குறித்த காணியானது பிரதேசசபையினால் துப்புரவுசெய்யப்பட்டது.எனினும் இதுவரையில் அக்காணி உரிமையாளருக்கு வழங்கப்படாத நிலையில் அக்காணியினை உருமையாளருக்கு வழங்கவேண்டும் என பிரேரனை முன்வைக்கப்பட்டபோது அக்காணியினை உரிமையாளருக்கு கொடுக்க சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று மேலுமொரு பிரேரணை சமர்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பான விளக்கமும் விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது.
பழுகாமம் பிரதேசவைத்தியசாலைக்கு அருகாமையுள்ள வண்ணான் குளம் அதனை தனியாருக்கு மீன் வளக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதனை வரவேற்கின்றேன்.ஆனால் அக்குளம் சலவை தொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டுசென்றனர். அக்குளத்தினை விவசாயக்குளம் என்று உரிமை கோரி, கிராமத்தில் இருக்கும் விளையாட்டுக்கழகம், கிராம அபிவிருத்தி சங்கம்,அருகில் இருக்கும் திலகவதியார் மகளிர் இல்லம் ஆலயநிருவாகம் என்பனவற்றின் எந்தவிதமான கருத்துகளும் பெறாமல் குளத்தின் பெயரை விவசாயக் குளம் எனச் சொல்லி மீன் வளர்க்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மழைகாலங்களில் குளத்தில் முதலைகள் பெருக்கெடுத்து மனிதர்களை தாக்கும் அபாயம் ஏற்படும்.
அக்குளத்தில் தாமரை செடிகள் வளர்ந்து அழகாக இருக்கின்றது. இதனை மீன்கள் வளர்ப்புக்காக கிருமிநாசினி அடித்து அழிக்கப்படுகின்றனர். இது சட்டத்துக்கு முரணான செயல என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்திற்கு அமைய குறித்த குளம் தொடர்பான நடவடிக்கையினை முன்னெடுக்க சபை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று உறுப்பினர் தியாகராசா மற்றும் தயாழினி ஆகியோர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான பூச்சூக்கூடு கிராமத்தில் பிள்ளையார் ஆலயம் 1990ஆம் ஆண்டுகளில் யுத்தத்தினால் அழிவடைந்தது. தற்போது கஷ்டப்பட்டு பொதுமக்களினால் புனரமைக்கப்பட்டு தற்போது கும்பாவிசேகம் இடம்பெறவுள்ளநிலையில் ஆலய பூசகராலும் நிருவாக சபையினாலும் ஆலயத்துக்கு குடிநீர் மின்சாரம் மலசல கூடம் ஆகிய வசதியினை செய்து தருமாறு கோரப்பட்டது.
அதற்கு இனங்க மின்சாரம், மலசல கூடவசதிகள் சபை தீர்மானத்துக்கு அமைவாக அனைவரும் ஏற்றுக்கொன்டதற்கு செய்து கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சபை 15நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.


