ஜப்பானின் மவுண்ட் அசோ எரிமலை கரும்புகையுடன் வெடிக்கக் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கையில் “ ஜப்பானின் க்யூ{ தீவில் அசோ எரிமலை நேற்று (புதன்கிழமை) காலை 11.43 முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து கரும்புகைகள் வெளிவர தொடங்கியுள்ளன.
எரிமலையை சுற்றி வாழ்பவர்களுக்கு 1 கிலோமீட்டருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. புகை அதிகமாக வெளியேறுவதால் சுற்றுலா பயணிகளும் க்யூ{ தீவுப் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
அசோ எரிமலை 2019 ஆம் ஆண்டு வெடித்தது. இந்த நிலையில் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
