வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பான வர்த்தமானி வெளியீடு

அரச வைத்தியர்களின்  ஓய்வு  பெறும் வயதெல்லை  தொடர்பான  வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அரச சேவையில் உள்ள வைத்தியர் ஒருவரின் ஓய்வு பெறும் வயதெல்லை  63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகள்  மாகாண சபைகள்  மற்றும்  உள்ளுராட்சி  அமைச்சினால்   நேற்ற குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய   ஓகஸ்ட் மாதம்  2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்  குறித்த வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க சேவைகள்  மாகாண சபைகள்  மற்றும்  உள்ளுராட்சி  அமைச்சர்  ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை