மட்டக்களப்பில்-தமிழர் பகுதியில் எல்லைக்கற்களை நடுவதற்காக வந்த தொல்பொருள் செயலணி

மட்டக்களப்பு, வந்தாறுமூலை  வேரத்தடி என்கின்ற தமிழர் பகுதியில் தொல்பொருள் செயலணி எல்லைக்கற்கள் நடும் முயற்சியில் இன்று (29)காலை ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை ஊர் மக்கள் உடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் விடயம் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் சிறிநேசன்  உள்ளிட்டோரும் அப்பகுதிக்கு உடன் விரைந்துள்ளனர்.




புதியது பழையவை