கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், நோர்வே மற்றும் நெதர்லாந்து உயரஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப் பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

