திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி பல தடவைகள் துஷ்பிரயோகம்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது உத்தரவிட்டார்.

கல்மெட்டியாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியிலுள்ள மேற்படி சிறுமியை காதலித்து வந்துள்ளதோடு, திருமணம் செய்வதாகக் கூறி பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

சந்தேகநபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரைக் கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (13) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை