சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதோயின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் யாழ் அலுவலகத்திற்கு முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகள் எமக்கு சிறுவர் தினம் இல்லை எமது தந்தை ,உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. எமக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
