தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்- எம்.ஏ.சுமந்திரன் விவசாயத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் விவசாயத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

கிளிநொச்சி – கண்டாவளையில் உள்ள அவருடைய விவசாய காணியில் இன்று காலை மாட்டில் ஏர் பூட்டி வயல் உழுதுள்ளார்.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் இது அமைந்துள்ளதாகவும் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் தொடர்ந்து குரலெழுப்புவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகான சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாக சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


புதியது பழையவை