உலகில் ஐந்து முதல்வர்களில் தெரிவான மட்டக்களப்பு மாநகர முதல்வர்

உலகலாவிய ரீதியில் யுனிசெப் நிறுவனத்தால் நடாத்தப்படும் “நகரங்கள் ஊக்கமளிக்கும் விருதுகள்” நிகழ்வுக்கு தெரிவாகிய உலகின் 05 முதல்வர்களுள் தெரிவாகி தமிழ் பேசும் மக்களுக்கு பெருமை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தேடித்தந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும்“நகரங்கள் ஊக்கமளிக்கும் விருதுகள்”(Cities Inspire awards)  நிகழ்வில் எதிர்வரும் நவம்பர் 17 அன்று உரையாற்றுவதற்காக உலகின் 05 மாநகர முதல்வர்கள் தெரிவாகியுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் உரையாற்றுவதற்காக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபன் தெரிவாகியுள்ளார்.

யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் நேய மாநகர திட்டத்தினை இலங்கையில் அமுல்ப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாநகர சபையானது கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த திட்டத்தினை மிகவும் ஆக்க பூர்வமாக செயற்படுத்தியமைக்காக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்கு கொள்வதற்காக உலகலாவிய ரீதியில் 05 மாநகரசபை முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தெற்காசியாவில் இருந்து தெரிவாகியுள்ள ஒரே ஒரு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் சரவணபவன், குறித்த சிறுவர் நேய மாநகர திட்டத்தினை நேர்த்தியான முறையிலே முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக நின்ற மட்டக்களப்பு மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்கள் , பலவிதமான தடைகள் எல்லாவற்றையும் தாண்டி குறித்த திட்டத்திற்காக உழைத்த மாநகரசபை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் எமது சபையின் முதுகெலும்பாக திகழும் ஊழியர்களுக்கு இந்த கௌரவத்தினை சமர்ப்பிப்பதோடு குறித்த திட்டத்தினை சிறப்ப்பாக நடாத்துவதற்கு எமது மட்டக்களப்பு மாநகர சபைக்கு முழு ஆதரவினை வழங்கிய யுனிசெப் ( ( Unicef ) ) மற்றும் செரி (Ceri) நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.
புதியது பழையவை