வடமாகாண முன்னாள் ஆளுநர் சாள்சிற்கு அடுத்த பதவி?

வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் முக்கிய செயலாளராக பணியாற்றி வருபவர் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி நியமிக்க முடிவு செய்துள்ள நிலையில் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக இருந்த ஜீவன் தியாகராஜா அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இப் பதவி விலகலை அடுத்து வடமாகாண முன்னாள் ஆளுநராக இருந்த திருமதி சாள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப் பட உள்ளதாகவும் அதற்கு திருமதி சாள்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஆனால் திருமதி சாள்ஸ் தரப்பில் இத் தகவல் உறுதிப் படுத்தப் பட வில்லை.
புதியது பழையவை