மட்டக்களப்பில் நாளை சில பகுதிகளில் நீர் வழங்கல் தடை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (13) புதன்கிழமை காலை 06:00 மணி தொடக்கம் மாலை 06:00 மணி வரை நீர் வழங்கல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறவுள்ள பராமரிப்பு வேலை காரணமாகவே நீர் வழங்கல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு நகர், கல்லடி, இருதயபுரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுனதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற பிரதேசங்களுக்கான நீர் வழங்கலே மேற்படி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு பாவணையாளர்கள் முன்கூட்டியே நீரை சேமித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை மட்டக்களப்ப மாவட்டத்தின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் அலுவலகம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை