மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்து

மட்டக்களப்பு  காத்தான்குடி  பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவை முகமது அம்ஹர் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சம்பவ தினமான இன்று அதிகாலை 5.30 மணிக்கு பயணித்த கார் மீது, காத்தான்குடி பீச் வீதியில் இருந்து பிரதான வீதி சமிக்கை விளக்கு சந்தியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சமிக்கை விளக்கு சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை