ஆசிரியர் தினமான இன்றைய(06) தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்திற்கு முன்னாள் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் அதிபர் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.