எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தை இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நாளை வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களின் விலைகளை பாரிய அளவில் அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரம் ரூபாவினாலும், சீமெந்து பை ஒன்றினை 180 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விலைகளுடன், நுகர்வோர் விவகார அதிகார சபை இணங்காமையினாலேயே புதிய விலைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
