மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியினால்-உலக நீச்சல் தினம் அனுஸ்டிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையினை எழுச்சி பெறச்செய்யும் வகையில் உலக நீச்சல் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று உலக நீச்சல் தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

சுற்றுலாப்பயணிகளை கவரவும் கொரோனாவினால் உளவளத்தினை மேம்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியினால் ஆறு மாணவர்கள் கலந்துகொள்ளும் கடலில் ஒரு கிலோமீற்றர் நீந்தும் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது கல்லடி கடற்கரையில் ஆறு மாணவர்கள் ஒரு கிலோமீற்றர் நீந்திவந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.

மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக நீச்சல் பயிற்சியாளருமான தங்கத்துரை சோமஸ்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன்,விளையாட்டு உத்தியோகத்தர்களான பிரசாத்,சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியினை வழங்கி வரும் நீச்சல் பயிற்சி கல்லூரியாக ஸ்ரீ சுவிமிங் அகடமி செயற்படுகிறது.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் நீரினால் சூழப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரும் நீச்சல் தொடர்பான அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக நீச்சல் பயிற்சியாளருமான தங்கத்துரை சோமஸ்காந்தன் இதன்போது தெரிவித்தார்.




புதியது பழையவை