மட்டக்களப்பு-செங்கலடி பிரதேசசெயலக பிரிவில் ஆலயங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவா முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களிற்குள் நேற்று அதிகாலை புகுந்து காட்டு யானைகளினால் ஆலயங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆலயத்தின் கட்டிடங்கள் மட்டுமின்றி ஆலய வளாகத்தில் நடப்பட்டிருந்த பயன்தரும் மரங்களும் முற்றாக சேதமாகியுள்ளன. மேலும் ஆலயத்திற்குள் புகுந்து பூசைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை