கண்டி- அங்கும்புற பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது குறித்த வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரும், மகளும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.