முதியவர் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வயோதிப தந்தை ஒருவர் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக இன்று (14)மீட்கப்பட்டுள்ளார்.

75 அகவையுடைய பாலன் பழனியாண்டி என்ற வயோதிபரே நேற்று (13.11.21) இரவு தவறான முடிவெடித்து தூக்கில் தொங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த வயோதிபருக்கு கை, கால்களில் எரிவு நோய் ஏற்பட்டு, அதன் தாக்கத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு முடிவு எடுத்திருக்கலாம் என கிராம வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
புதியது பழையவை