யாழ்-பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று(27) மாலை 6.05 மணிக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி இடம்பெற்றது.

மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

எனினும் யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பெருமளவு இராணுவம், காவற்துறையினர், புலனாய்வுப் பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை