மட்டக்களப்பில்-தனது வீட்டில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

மாவீரர் நினைவேந்தல் தினமான இன்று (27) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீநேசன் தனது வீட்டில் வைத்து நினைவேந்த்தல் தினத்தினை அனுஷ்டித்துள்ளார்.

இதன்போது மறவர்கள் உறவர்களை மனமதில் பதிப்பதும் மறைந்தவர் நிறைந்தவரை மானசீகமாய் ஏந்துவதும் மானிடன் உரிமையாகும் ஆதலால் அவ்வன்பர்களை மனதிலேந்தி மரியாதையளிப்பது மானத்தமிழரின் மரபுரிமையாகும் அக்கடமை தன்னை அன்றும் இன்றும் என்றும் செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் பல இடங்களில் இன்று மாவீரர் தினத்தினை பலர் அனுஷ்டித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை