மட்டக்களப்பில் வன இலாகாவிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வனவளத்தினைக்களம் கோராவெளி, வட்டவான் போன்ற கிராமங்களில் அத்துமீறி வன இலாகா, விவசாய காணிகளில் மரநடுகை செய்வதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த காணிகளை வன இலாகா துறையினர் திட்டமிட்டு சூறையாட முற்படுவதாகவும் இதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பலமுறை அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.




