கண்ணீருடன் ஈகைச் சுடரேற்றி மாவீரர்களுக்கும் இறந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்திய மக்கள்

வல்வெட்டித்துறை தேருவில் ரேவடி கடற்பரைப் பகுதியில் பொது மக்கள் ஒன்று குவிந்து மாவீரர்களுக்கும் இறந்த பொது மக்களுக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர.

ஆயிரக்கணக்கில் ஒன்று குவிந்த மக்கள், கண்ணீருடன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொது மக்களை திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியில் நின்றும் சுடரேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் திரண்டுள்ள நிலையில், இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம், வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் இவ்வாறு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இராணுவ வாகனங்களும் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்று குவிந்துவரும் நிலையில், அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை