யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.




