மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் உள் நுழைந்த காட்டு யானையால் விவசாயியான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (01.11.2021) பகல் பொழுதில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வந்தாறுமூலை மூங்கிலடி வீதியை அண்டி வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தாமோதரம் (வயது 60) என்பவரே உயிழந்துள்ளார்.

விவசாயியான இவர் வழமைபோன்று செங்கலடி பதுளை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது பற்றைக் காடுகளுக்குள்ளிருந்து திடீரென வீதிக்கு வந்த காட்டு யானை மூர்க்கமாகத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டதும் பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் காட்டு யானை நடு வீதியில் வைத்துத் தாக்கியதில் விவசாயி பலி.மட்டக்களப்பில் காட்டு யானை நடு வீதியில் வைத்துத் தாக்கியதில் விவசாயி பலி.
புதியது பழையவை