திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - அபயபுர பிரதான வீதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (14) பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிலாவெளியில் இருந்து மார்பிள் பீச் செல்வதற்காகக் கண்டி-அலவத்துக்கொட பிரதேசத்திலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் திருகோணமலை மூன்றாம் கட்டை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.


