கொழும்பில் வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் -சிறீதரன்

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் போரிட்டு உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக நேற்றையதினம் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கொழும்பில் வைத்து மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை செலுத்தியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்திலும் அவர் மாவீரர் தினத்தை நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை