மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ராசமாணிக்கம்  இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறைவாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே சாணாக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

31 வயதான எனக்கு ஓய்வூதியம் அவசியமில்லை. எவ்வாறாயினும் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும்.

 அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, இவ்வாறான தயார் நிலை தொடர்பாக பேசப்பட்டதாக தனக்கு தெரியவந்தது எனவும் சாணாக்கியன் ராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார். 
புதியது பழையவை